தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே, கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கு அத்துமீறி உள்ளே நுழைந்து அடிக்கல் நாட்டுவதற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டா ட்சியர் ஆகியோரை சபை மக்கள் ஒன்று சேர்ந்து அடிக்கல் நாட்ட குழி தோண்ட முடியாதபடி குழியின் மேல் உட்கார்ந்து போராட்டம் செய்ததால் அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரும்பி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டத்திற் குட்பட்ட புதுக்கோட்டையில் உள்ள புனித வளனார் எனும் ஜோசப் தேவாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் 80 சென்ட் இடத்தை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பி நுழைவு வாயில் அமைத்து உள்ளே மாம் செடிகள் வளர்த்து சுமார் 130 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், குடி போதை மறுவாழ்வு மையம் கல்லறைத் தோட்டம் போன்றவை அமைத்து பல நற்பணிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலைமையில் மற்றும் காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாள ர்களுடைய மழலையர்களை அலுவலகப் பணி நேரங்க ளில் கவனித்துக் கொள்ள புதிதாக மழலையர் காப்பகம் (Creche) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 அறி விப்புகள் வெளியிடப்பட்டன. அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் பத்திரப் திவு அலுவலகம் அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி சென்றுள்ளார்.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று உள்ளது. அப்போது இந்த தேவாலயத்திற்கு சொந்த மான இடத்தில் உள்ள 90 சென்ட் இடம் நத்தம் புறம் போக்கு இடமாக உள்ளது எனவும் அதில் பத்திர பதிவு அலுவலகம் கட்டலாம் என முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் அரசுக்கு கோப்புகள் அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஆலய பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகள் யாருக்கும் எந்தவிதமான தகவலும் கூறாமல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டிடம் கட்டுவதற்கு என்று திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் வந்து அடிக்கல் நாட்ட குழி தோண்டும் பணியைத் துவக்கினர்.
அப்போது அங்கிருந்த ஆலய பங்கு மக்கள் ஒன்று சேர்ந்து குழியின் உள்ளே அமர்ந்து குழி தோண்ட விடாதபடிக்கு தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வருகிற திங்கட் கிழமை வரை எவ்வித வேலையும் செய்ய மாட்டார்கள் எனவும் நீதிமன்ற உத்தரவு வந்த பின்பு மற்ற வேலைகள் துவங் கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் வாக்களித்த தன் பெயரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
அடிக்கல் நாட்ட வரு கை தந்த சட்டமன்ற உறுப்பி னர் சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இவர் தனது சட்டமன்ற தொகுதியை விட்டு அடுத்த தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நுழைந்து இவ்வாறாக பிரச்சினையை கிளப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
மத்திய பாஜக அரசு உடன் இணைந்து தமிழக அதிமுக அரசும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றதா என்ற அச்சம் சிறுபான்மை யினர் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. அரசு இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு புதுக்கோட்டையில் தற்போது அடிக்கல் நாட்ட அந்த இடத்தை விட்டு விட்டு வேறு இடத்தில் பத்திர பதிவு அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.