சிவகங்கை மாவட்டதில் குழந்தையை காப்பாற்ற முழு முயற்சியில் செயல்படுவேன் என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முத்துபாண்டி என்ற தம்பதியினருக்கு அரசு மருத்துவமனையில் 21-04-20 அன்று ஆண்குழந்தை பிறந்தது பிறக்கும்போதே முதுகில் முதுகில் கட்டி இருந்தது தெரியவந்தது. உடனே அரசு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு மதுரையில் இருக்கும் நரம்பு டாக்டரிடம் கொண்டு செல்லுங்கள் என வழிகாட்டுதல் செய்ததன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு 23ஆம் தேதி மாலை சேர்க்கப்பட்டு கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவர்கள் பல சோதனைகள் செய்த பின்பு இங்கு ஆப்பரேசன் செய்ய போதுமான மருத்துவர்கள் இல்லை ஆகவே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உடனே ஆப்பரேசன் செய்து குழந்தையை காப்பற்ற பாருங்கள் என கூறி விட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் அந்த குழந்தையை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்வதற்கு பலலட்சம் தேவைப்படும் என்றும் உடனே ஆபரேஷன் செய்தால் குழந்தையை காப்பாற்றி விடலாம் என தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் கூறியதாவது;- சாதாரண சலவை தொழில் செய்யும் நாங்கள் கோரோனாவின் ஊரடங்கு உத்தரவால் அன்றாட உணவிற்கு கஷ்டப்பட்டுகொண்டிருக்கும் நேரத்தில் எங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி மருத்துவம் செய்வது என்பது முடியாது என்றனர். குழந்தையின் மீது தனி கவனம் செலுத்தி குழந்தையை காப்பாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுகுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபொழுது குழந்தையை காப்பாற்ற முழு முயற்சியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.