உழைப்பின்றி உலகில்லை

1886ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் உழைப்பு என்று எத்திசையும் தொனிக்க ஊழிப்பாளர்களின் குரல் வானளவு உயர்ந்தது.


உழைப்பாளர்களின் உழைப்பின்றி எந்த பொருளும் கிடையாது. உழைக்கும் வர்க்கத்தினர் இல்லாத நாடும் இல்லை. 18ம் ஆண்டின் இறுதியில் முதலாளித்துவ வர்க்கத்தினர் தொழிலாளர்களை 18 மணி நேரம் பணி புரிய வைத்தனர்.


இதனை எதிர்த்தே தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் தலைமையில் மே பந்தேதி சிகாகோவில் கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் அமைதியான முறையில் தொழிலாளார்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் போரட்டத்தின் சில மணி நேரங்களில் கலவரம் வெடிக்க துவங்கியது. கலவரத்தில் தீடிரென கையெரி குண்டு வந்து விழுந்தது. இதனால் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


இதனால் தொழிலாளர்களின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7 பேர் மீது வழக்குபதிவிட்டு அவர்களுக்கு தண்டணையும் வழங்கப்பட்டது. அதில் தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்து கொண்டார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி வெடிக்க துவங்கியது.


அவர்கள் அரசுக்கு கண்டனம் தெரி வித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டது. முதலாளித்துவத்தின் அடக்கு முறையை எதிர்த்து பெரும் அதிர்வலைகள் நாடெங்கும் எழும்பியதன் விளைவாக 8 மணி நேரம் வேலை உறுதி செய்யப்பட்டது. ஊழைப்புக்கு ஏற்ற ஊதியமும் அளிக்க வித்தாக அமைந்தது தான் மே தினம்.


இன்றும் முதலாளிகளின் சுரண்டல்கள் முடிவுக்கு வரவில்லை இதற்கு காரணம் நம்முடைய அறியாமை தான் போராடி பெற்ற உரிமைகளை இன்னும் நாம் அறிந்து கொள்ளவில்லை எந்த நாட்களை கொண்டாடினாலும் அதின் வரலாற்றை அறிந்தால் போதும் விழிப்புடன் செயல்பட முடியும்.