பி.எம்.கேர்ஸ்!?

கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டு வருகின்றது. வைரசின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதில் ஒன்று தான் நிதி திரட்டும் திட்டமான பி.எம்.கேர்ஸ். பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் பி.எம்.கேர்ஸ் என்ற புதிய அமைப்பு மார்ச் 28 அன்று அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த பி.எம்.கேர்ஸ் என்ற நிவாரண அமைப்புக்கு தான் நாடு முழுவதிலும் இருந்து கொரோனா தடுப்பு பணிக்காக நிதியளிக்கப்பட்டு வருகின்றது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிஎம் கேர்ஸ்க்கு 500 கோடி வழங்கியுள்ளது. அத்துடன் பல்வேறு நிறுவனங்களிலிருந்து பிஎம் கேர்ஸ்க்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு இதுவரை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மக்களுக்குஎதுவும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பி.எம்.கேர்ஸ் பற்றி கருந்து தெரிவித்துள்ளார். அதில் பிஎம் கேர்ஸ் போன்ற நன்கொடை அடிப்படையிலான நிதி எந்த ஒரு சட்டத்தின் கீழோ அல்லது நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழோ வராது ஏனெனில் இது நாட்டின் ஒருங்கிணைந்த நிதியத்தின் பகுதியாக இல்லை என்பதே காரணம். இந்த நிதி நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் தணிக்கை செய்ய உரிமை இல்லை என்று சிஏஜி அலுவலகம் கூறியுள்ளது. இதனை மனதில் கொண்டே பிரதமர் நிவாரண நிதியை முறையாக தணிக்கை செய்வது அவசியம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு விவரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ராகுல் காந்தி கூறியதை ஆதரிக்கும் வகையில், இதுவரை கொரோனா நோயாளிகளுக்கு ஏன் பிஎம் கேர்ஸ் நிதி செலவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இருவர்களின் கருத்தும் பி.எம்.கேர்ஸ் பற்றி மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்றும் தமிழக அரசு பிசிஆர்) கருவிகளின் தேவை அதிகரித்துவிட்டதாக கூறி 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. தேவைகள் அதிகரிக்கை ஏன் மத்திய அரசு நிதியளிக்காமல் மௌனம் சாதிக்கின்றது கவலையளிக்கின்றது.