தென் கோரியா,
தேகு தடகள மையத்தின் உட்புற விளையாட்டரங்கத்தில் 16 ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை 3 வாரங்களுக்கு பிளாஸ்மா நன்கொடை திட்டமிடப்பட்டுள்ளது - முந்தைய இரண்டு பிளாஸ்மா நன்கொடைகளிலும் ஏற்கனவே பங்கேற்ற 1,700 பேர் உட்பட 4,000 ஷின்ஷொன்ஜி உறுப்பினர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.
ஷின்ஷொன்ஜி இயேசுவின் சபை, சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் (தலைவர் Man Hee Lee, “ஷின்ஷொன்ஜி”) தனது மூன்றாவது குழு பிளாஸ்மா நன்கொடை இயக்கத்தை இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு நடத்தப்போவதாகக் கூறினார்.
இந்த பிளாஸ்மா இயக்கத்தில் சுமார் 4,000 ஷின்ஷொன்ஜி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (கே.டி.சி.ஏ) கடந்த மாதம் பிளாஸ்மா நன்கொடைக்கு பங்கேற்பதற்காக ஷின்ஷொன்ஜி இயேசு கிறிஸ்துவின் சபையிடம் கோரிக்கை விடுக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
“ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் COVID-19 தொடர்ச்சியாக உள்ளபோது, வினைத்திறனான சிகிச்சை இல்லாத இந்த நிலையில் குழு ப்ளாஸ்மா தானத்தின் மூலம் விரைவாக ப்ளாஸ்மா சிகிச்சைகளை மேம்படுத்துவது அவசியமாகும்".
கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஷின்ஷொன்ஜி இயேசு கிறிஸ்துவின் சபை ஏற்கனவே குழுவாக பிளாஸ்மா தானம் இரண்டு தடவை நடத்தியது.
பிளாஸ்மா சிகிச்சை வளர்ச்சிக்கான நோக்கத்தில் இதுவரை மொத்தம் 2,030 பேர் பிளாஸ்மா நன்கொடையில் பங்கேற்றனர், அவர்களில் சுமார் 1,700 பேர் ஷின்ஷொன்ஜி இயேசு கிறிஸ்துவின் சபை உறுப்பினர்கள். இதில் 312 பேர், குறைந்தது இரண்டு முறையாவது பங்கேற்றுள்ளனர். மத்திய பேரழிவு மற்றும் பாதுகாப்பு எதிர்நிலை தலைமையகத்தின் துணை இயக்குனர் குவான் ஜூன்-வூக் மூன்றாவது மாநாட்டின் போது, பின்வருமாறு தெரிவித்தார்.
“பிளாஸ்மா சிகிச்சையை வளர்ப்பதற்கான நோக்கத்திற்காக, சுமார் 4,000 ஷின்ஷொன்ஜி உறுப்பினர்கள் 16ம் திகதியில் இருந்து தொடங்கி மூன்று வாரங்களுக்கு பிளாஸ்மா நன்கொடையில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். ஷின்ஷொன்ஜியின் தொடர் பங்களிப்புக்கு, தேகு நகரம் மற்றும் கொரிய செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." மூன்றாவது குழு பிளாஸ்மா நன்கொடையானது தேகு தடகள மையத்தின் உட்புற அரங்கில், சுமுகமான செயற்பாட்டை உறுதிசெய்வதற்காக, தன்னார்வலர்களுடன் நடைபெறும்.
முதல் மற்றும் இரண்டாவது பிளாஸ்மா நன்கொடையைப் போலவே, பங்கேற்பாளர்கள் தாங்கள் பெறும் 20,000 முதல் 30,000 பயணச் செலவு உதவியைப் பெறுவதை மறுத்து, வரி செலுத்துவோரின் பணத்தின் மீதான சுமையைக் குறைப்பார்கள். இயேசுவின் ஷின்ஷோன்ஜி சபையின் உறுப்பினர் ஒருவர் சொன்னதாவது, “பிளாஸ்மா சிகிச்சையானது (பிளாஸ்மா treatment) சுகமாகும் தருவாயான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தியை (CG Green Cross /சி.ஜி. கிரீன் கிராஸ்) கேட்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், .
இது நாம் செய்யக்கூடிய மிகவும் மதிப்புமிக்க காரியம் (COVID இலிருந்து மீண்ட நபர்களாக). அவர் மேலும் கூறுகையில், “பிளாஸ்மா தானத்தில், பங்கேற்ற எங்கள் அனுபவத்தை கண்ணோக்கினால், COVID-19 ஐ வெல்லும் சக்தி சகிப்புத்தன்மை, அன்பு மற்றும் ஒற்றுமை என்பதை எங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் உணர்ந்துகொண்டார்கள்.
பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் COVID-19 ஐ தென் கொரியா ஜெயம்கொள்ள எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். ” அவர் மேலும் கூறுகையில், “தேவாலய வசதிகளுக்கான பணிநிறுத்த உத்தரவுகள் பிராந்தியங்களால் நீக்கப்பட்டன என்பதில் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
தென் கொரியாவில் உள்ள ஒவ்வொரு ஷின்ஷொன்ஜி சபையும் COVID-19 நிலைமை சீராகும் வரை இணையதளம் ஊடாக ஆராதனைகளை தொடர திட்டமிட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஒன்றுகூடுதலுக்கான தடை மற்றும் வசதிகளின் உத்தரவு நீக்கப்படுகிறதோ இல்லையோ, எங்கள் சபை உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதையும், எங்கள் சமூகங்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம்”