தினமும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 4 பேருக்கு போதிய ஆதாரம் இல்லாததால் நீதி மறுப்பு

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆய்வில் முடிவு

புதுடெல்லி, 

சர்வதேச மகளிர் தினத்தன்று- கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒவ்வொரு நாளும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் காவல்துறையினர் தங்கள் வழக்குகளை முடித்து வைப்பதால் நீதி மறுக்கப்படுவதாக தெரியவந்தது. 

 தேசிய குற்றபிரிவு ஆணையகம் (NCRE வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் போக்சோ சட்டம் 2012ன் கீழ்தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் & 2017 முதல் 2019 ஆண்டுகள் வரை காவல்துரையினரால் “போக்சோ வழக்குகளை அகற்றும் முறையில் தரவுகள் பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டன. 

பல ஆண்டுகளாக நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. “2017 மற்றும் 2019 க்கு இடையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் விசாரணைக்கு பின்னர் காவல் ஏற்ப்பட்டுள்ளது என ஆய்வு காட்டியுள்ளது.

ஒரு முழுமையான சிறப்பு சட்டத்தின் தேவையை அரசு உணர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாள்வதற்கு ஒரு சிறப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது, "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் - 2012 (POCSO) ஆனால் இந்த சட்டம் உண்மையில் எதிர்பார்த்த செயல்பாட்டை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் பதிவு செய்யப்பட்ட மற்றும் விசாரிக்கப்பட்ட 3000 போக்சோ வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நியாயமான விசாரணைக்கு நீதிமன்றத்தை அடைய தவறிவிடுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் காவல் துறையால் வழக்குகள் முடித்து வைக்கப்படுவதால் நீதி மறுக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

- மேலும் N.C.R.B தரவுகளிலிருந்து தெரியவந்தது என்னவெனில், ஏராளமான போக்சோ வழக்குகளில் (5ல் 2 பங்கு) வழக்குகள் உண்மையான போதிலும் போதுமான ஆதாரங்கள் அல்லது துப்பு இல்லை (அ) கண்டு பிடிக்கப்பட்ட முடியாத காரணங்களால் வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக தெரிய வந்தது.

- 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்படி 43 சதவீகித வழக்குகள் இந்த முறையில் முடித்து வைக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2017 மற்றும் 2018ஐ விட அதிகமாக உள்ளது. வழக்குகளை இம்முறையில் முடித்து வைப்பதற்கு இரண்டாவது மிக முக்கிய காரணம்; தவறான அல்லது போலியான வழக்குகளும் முக்கிய காரணியாகவுள்ளது.

- மேலும், அதே காலகட்டத்தில் (2017-2019) போக்சோ வழக்குகளின் மற்றொரு பகுப்பாய்வு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட வழக்குகளை நீதி மன்றங்கள் விரைவு படுத்தவேண்டும். ஆக, 89 சதவிகித வழக்குகள் நீதிக்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் காத்திருந்தது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை விட ஒரு வருடத்தில் விசாரணை முடிவடைந்த வழக்குகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் பின்னிணைப்பும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 

இந்த கடுமையான குற்றங்களை சமாளிக்க காவல்துறையினர் போதுமான வளங்களை ஒதுக்கவில்லை என்பதை இந்த இடைவெளி நிரூபிக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் 51 சதவிகித வழக்குகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்தது. 

இந்த மாநிலங்களில் போக்சோ வழக்குகளில் தண்டனை விகிதம் 30% 64% இடையில் உள்ளது. இது நீதிமன்றங்களில் வழக்குகளை சிறப்பாக முன் வைப்பதுதன் மூலம், திறம்படகண்டறிதல் மற்றும் சரியான தண்டனை என்பன ஒரு குற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகும்.

 ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விசாரணையின் போது அவர்கள் உண்மைக்கு புறம்பாக மாறுவதற்கும், எப்.ஐ.ஆரில் உள்ள உண்மைகளிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வற்புறுத்தலுக்கும் தூண்டுதலுக்கும் உட்பட்டுள்ளனர், ஆய்வு குறிப்பிட்டது. - குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நபராக இருக்கும் நிகழ்வுகளில் இது குறிப்பாக நிகழ்கிறது.

போக்சோ சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை திறம்பட பூர்த்தி செய்ய போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது துணை போலீஸ் கமிஷ்னர் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது - இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரத்யேகப் பிரிவு தேவை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இந்தப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் விசேஷமாக பயிற்சியாக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க தேவையான சரியான உளவியல் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் பெருமளவில் நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு போக்சோ வழக்குகளை விசாரிக்க பிரத்தியேகமான விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.